Feast of Our Lady of Holy Rosary

செபமாலை என்பது ஒரு தியானமாலை. இதை ஆங்கிலத்திலே Contemplative Prayer என்றழைப்பார்கள். மரியா ஆண்டவருடைய காலடியில் தன் மெய் மறந்திருந்தது போன்ற அனுபவமாகும். இது ஆண்டவர் இயேசுவினுடைய வாழ்வின் நிகழ்வுகளை அசைபோடுகின்ற செபம்.

ROSARIUM என்பது இலத்தீன் வார்த்தை. இதை ரோஜா மாலை அல்லது ரோஜா தோட்டம் என்று மொழி பெயர்க்கலாம். ரோஜா மலர் பூக்களின் அரசி. லீலி மற்றும் ரோஜா மலர்கள் அரசியான, பரிசுத்தமான அன்னை மரியாளை குறித்து காட்டும் மலர்களாகும். செபமாலையின் மகிமையைப் பற்றி அன்னை மரியாள் பலருக்குத் தோன்றி விளக்கியுள்ளார்கள். ‘ஒவ்வொரு முறையும் நீங்கள் ‘அருள் நிறைந்த மரியே’ என்ற செபம் சொல்லும் போது, எனக்கு ஒரு ரோஜாப்பூவை அன்பளிப்பாக அளிக்கின்றீர்கள்’ என்கிறார்கள். செபமாலையை முழுமையாக எல்லா பேருண்மைகளையும் தியானித்துச் செபிக்கும் பொழுது, எனக்கும், இயேசுவுக்கும் ரோஜாக்களைக் கோர்த்த கிரீடமாக நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

ஆதிகாலத் திருஅவையின் தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களும், இதர நம்பிக்கையாளர்களும் இயேசு கற்றுத் தந்த இறைவேண்டலையும், மங்கள வார்த்தை செபத்தையும் உருக்கமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் இன்று நாம் செபிக்கும் கன்னிமரியாவின் செபமாலையை, கி.பி.1214-ல் தான் புனித தோமினிக் வழியாக அன்னை மரியாள் திருஅவைக்கு வழங்கினார்கள். அக்காலத்தில் ஆல்பிஜென்சியன்ஸ் என்ற முரண்பாட்டு கொள்கையினர் மனம் மாறி திருஅவைக்கு வரவேண்டுமென்று புனித தோமினிக் செபித்து வந்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு காட்டுக்குள் சென்று பாவிகள் மனந்திரும்ப வேண்டி செபித்தார். மூன்றாம் நாள் செப மற்றும் தவத்தின் விழைவால் உணர்வற்ற நிலையில் இருந்தார். அப்பொழுது அன்னை மரியாள் புனித தோமினிக்குக்கு காட்சி தந்து எதிரிகளையும், முரண்பாட்டுக் கொள்கையினர்களையும் முறியடித்து, பாவிகளை மனந்திரும்பச் செய்யும் ஒரே கருவி செபமாலை என்று சொல்லி, செபமாலையை எப்படி செபிப்பது என்றும் கற்றுக் கொடுத்தார்கள்.

அந்நாளிலிருந்து தனது வாழ்நாள் முழுவதும் புனித தோமினிக் செபமாலையின் புகழையும் பெருமையையும் தனது மறையுரைகளின் வழியாகப் போதித்து அறிக்கையிட்டு வந்தார்.

படிப்பறியாத பாமர மக்கள், தாவீது எழுதிய 150 திருப்பாக்களையும் செபிக்க முடியாத வேளையில், கன்னி மரியா கொடுத்த செபமாலை பேருதவியாக இருந்தது. செபமாலையில் நாம் செபிக்கும் 150 அருள் நிறைந்த மரியே என்னும் செபம் 150 திருப்பாக்களை ஒத்ததாக அமைந்திருந்தது.

செபமாலை செபிப்பது என்பது ஆண்டவர் இயேசுவுடைய வாழ்க்கை நிகழ்வுகளை மனதிற்கு கொண்டுவருதல். சிந்தித்தல், தியானித்தில், சீரிய செம்மனத்தில் பதித்தல், இறைவனை புகழ்தல், இறைவனுக்கு நன்றி கூறுதல், இறைவனை வியந்து போற்றுதல் மேலும் இந்த அனுபவத்தை மனதிலே பதித்து வைத்து இன்பம் காணுதல் – இவைகளே செபமாலையில் இடம்பெறுகின்றன.

செபமாலை நம் வாழ்வின் பேராயுதம்:

திருஅவையின் மறுமலர்ச்சிக்கு உதவும் பேராயுதம் பற்றி பவுலடியார் கூறுகின்ற கூற்று செபமாலைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கின்றது. ‘நாங்கள் உலகில் தான் வாழ்கிறோம், எனினும் எங்கள் போராட்டம் உலகைச் சார்ந்தது அல்ல. எங்கள் போராட்டத்தில் நாங்கள் பயன்படுத்தும் கருவிகள் உலகு சார்ந்தவை அல்ல. மாறாக அவை கடவுளின் வல்லமையால் அரண்களை தகர்த்தெறியக்கூடியவை. அவற்றைக்கொண்டு குதர்க்கவாதங்களையும், கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராக தலைதூக்கும் அனைத்து மேட்டிமையையும் தகர்த்தெறிகிறோம்’ (2 கொரி 10:3-5). இவை அனைத்தும் செபமாலைக்கு பொருந்தும். செபமாலையை செபிக்கும் நாம் உலகம் வியக்கும் இம்மாபெரும் வெற்றியைப் பெற்று அனுபவிக்கிறோம்.

செபமாலையும் திருத்தந்தையர்களும்:

செபமாலை பக்தியை மிகத் தீவிரமாகப் பரப்பியவர் திருத்தந்தை 13ம் சிங்கராயர். இவரே செபமாலையின் திருத்தந்தை எனப்பெயர் பெறுகிறார். இவருடைய காலத்தில் தான் அக்டோபர் மாதம் செபமாலை மாதமாக ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் ஏழாம் நாள் செபமாலை மாதா திருவிழாவானது நிறுவப்பட்டது. செபமாலையை குடும்ப செபமாக வற்புறுத்தி வளர்த்தவர் திருத்தந்தை 12ம் பத்திநாதர். மகிழ்ச்சி, துயர, மகிமை மறையுண்மைகளோடு ஒளியின் மறையுண்மைகள் ஐந்தை இணைத்து, 153 மணி செபமாலையை 203 மணி செபமாலையாக்கிவர் திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் (2002ம் ஆண்டு).

எக்காலத்திற்கும் ஏற்ற செபமாலை:

19ம் நூற்றாண்டானது அறிவியல் விரைவாக வளர்ச்சியடைய ஆரம்பித்த பகுத்தறிவின் காலம். உலக புகழ் பெற்ற அறிவியல் மேதை லூயி பாஸ்டர் 1885ம் ஆண்டு பாரிஸ் நகரில் சொற்பொழிவு கொடுக்கவிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக ரயிலில் பயணம் செய்த சில மாணவர்கள் அவர்களுக்கே உரிய பாணியில் பேசி சிரித்துக் கொண்டும் கும்மாளம் அடித்துக் கொண்டும் சென்றனர். அதே பெட்டியில் சுமார் 65 வயதுடைய ஒரு மனிதர் செபமாலையை உருட்டிக்கொண்டிருந்தார். ,தைப் பார்த்த சிலர் அவரை ஏளனம் செய்தனர். அறிவியலால் பலவகையில் முன்னேற்றங்கள் நிகழ்ந்து, லூயி பாஸ்டர் போன்ற அறிவியல் மேதைகள் வாழ்வையே மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் ,து போன்ற பழைமைவாதிகளும், மூடநம்பிக்கையுடையவர்களும் ,ருக்கின்றார்களே என்று அவர்கள், அவரை ஏளனம் செய்து சிரித்துக் கொண்டு பல்கலைக்கழகம் நோக்கி பயணித்தனர்.

பல்கலைக்கழகத்தில் ஒரு பெரிய அரங்கில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பேராசிரியர்களும் கூடியிருந்தனர். ‘,தோ நாம் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்ற உலகம் போற்றும் அறிவியல் மேதை லூயி பாஸ்டர்’ என அறிவிக்கப்பட்டு திரை விலக்கப்பட்டது. சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் மேடைக்கு வந்தார். ரயில் பயணத்தில் அமைதியாக செபமாலை உருட்டிக்கொண்டிருந்த அம்மனிதர் தான் லூயி பாஸ்டர். எனவே செபமாலை என்பது பழைமைவாதிகளின் செபமென ஒதுக்கி வைக்க முடியாது. மாறாக ,து நவீன கால ஆய்வுகளால் பயனுள்ளதாகவும், தேவையானதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ,தை மூடப்பழக்கவழக்கம் என்று சொல்பவர்கள் தங்கள் அறியாமையையே வெளிப்படுத்துகின்றனர்.

ஆகவே அன்னை மரியா நம்பிக்கையோடு தனக்கும், தன்னைச் சுற்றியும் நிகழ்ந்ததை எல்லாம் மனதில் ,ருத்தி தியானித்தது போல, நாமும் ,ந்த நவீன காலத்தில் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப அனைத்தையும், அனைவரையும் பற்றி செபமாலையில் அன்னையுடன் ,ணைந்து தியானிக்கும் போது செபமாலை வாழ்வுமாலையாகின்றது.

செபமாலை செபிப்போம்! நிறைவாழ்வு காண்போம்!!

செபமாலையின் 15 வாக்குறுதிகள்!

நம் பரிசுத்த தேவ மாதா தூய தோமினிக் மற்றும் அருளாளர் ஆலன் ரோச் வழியாக வாக்களித்த செபமாலையின் 15 வாக்குறுதிகள்.
 1. செபமாலை செபிப்பவர்கள் எனது மக்கள். எனது ஒரே மகன் இயேசுவின் சகோதர சகோதரிகளாயிருப்பர்.
 2. செபமாலை செபித்து அதன் வழியாக நீங்கள் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்.
 3. செபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற நிலையில் வேதனையினின்று மீட்பேன்.
 4. செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும், இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர்.இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும் பங்கு பெறுவர்.
 5. மறை உண்மைகளை சிந்தித்துப் பக்திப் பற்றுடன் செபமாலை செபிப்பவன் அகால மரணத்திற்கு ஆளாக மாட்டான். இறைவன் அவனைத் தண்டிக்க மாட்டார். அருள் நிலையில் வாழ்ந்து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவான்.
 6. செபமாலை செபிப்பவர் பரிசுத்த வாழ்விலும், நற்செயல்களிலும் வளர்வர். செபமாலை உலகப் பற்றுதல்களிலிருந்தும், அதன் நிலையற்ற பொருள்களிலிருந்தும் ஆன்மாவை விடுவித்து விண்ணகத்தை நோக்கி அதனை உயர்த்துகிறது.
 7. செபமாலை செபிப்போர்க்குச் சிறப்பான பாதுகாப்பையும், மாபெரும் அருள் வரங்களையும் வாக்களிக்கிறேன்.
 8. செபமாலை நரகத்திற்க்கு எதிரான கவசம் இது தீமைகளை அழிக்கிறது.
 9. செபமாலையின் மீது உண்மையான பக்தி கொண்டிருப்பவன் திருச்சபையின் திருவருட் சாதனங்களை பெறாமல் சாகான்.
 10. செபமாலை பக்தியைப் பரப்புகிறவர்கள் என்னிடமிருந்து தங்கள் தேவைகளில் உதவி பெறுவர்.
 11. செபமாலை பரப்புகிறவர்களுக்கு அவர்கள் வாழ்நாளிலும், இறக்கும் வேளையிலும் விண்ணக நீதிமன்றம் முழுவதும் அவர்களுக்காக பரிந்து பேச எனது இறைமகனிடமிருந்து அனுமதி பெற்றுள்ளேன்.
 12. செபமாலையை விடாமல் தொடர்ந்து செபிப்பவர்கள் சில விசேச வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.
 13. செபமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள் அழிவுறமாட்டார்கள்.
 14. என் செபமாலையின் உண்மை புதல்வர்களாய் இருப்பவர்கள் பரலோகத்தில் மிகுந்த மகிமை அடைவார்கள்.
 15. என் செபமாலை மேல் பக்தி கொண்டிருப்பது மோட்சம் செல்வதற்கு ஒரு பெரிய உறுதிப்பாடாகும்.

அன்னை மரியாவின் மீது கொண்ட அன்பால் உங்கள் இதயத்தைப் பற்றி எரியச் செய்து அவருடைய ஆதரவைப் பெற எல்லா முயற்சியையும் செய்யுங்கள்.

(புனித ஜான் லியோனார்தியார் சிபன்தோ நகர் பேராயருக்கு கூறிய வார்த்தைகளை புனிதரின் மரியன்னை ஆன்மிகத்தை குறித்து தந்தை இப்பொலித்தோ மராச்சி எழுதியது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *