அன்னை மரியாவின் திருப்பெயரானது ஒரு மேன்மை பொருந்திய, மாண்புமிக்க, அருள் நிறை பெயராக இருக்கிறது.
இதையேதான் புனித அல்போன்ஸஸ் மரிய லிகோரியார் தன்னுடைய ‘மரியாவின் மாண்பு’ என்ற புத்தகத்தில் அழகான ஒரு நிகழ்வு வழியாக விளக்குகிறார்.
துறவி ஒருவர் அழகான பேசும் திறமைக் கொண்ட கிளியை வளர்க்கின்றார். அக்கிளிக்கு ‘மரியே வாழ்க’ என்ற நாமத்தை சொல்லிக் கொடுக்கின்றார். அது யார் அத்துறவியின் இல்லத்திற்கு வந்தாலும் மரியே வாழ்க என்ற நாமம் கொண்டு வரவேற்கும். ஒரு நாள் அக்கிளி வழக்கம் போல் இரை தேட வெளியே சென்ற போது ஒரு பருந்தானது அதை வேட்டையாட முயற்சிக்கிறது. அச்சமுற்ற அந்த கிளி மரியே வாழ்க! மரியே வாழ்க! என்ற நாமத்தை சொல்லிக் கூக்குரலிட்டுக் கொண்டே தப்பிக்க முயற்சிக்கிறது. அப்போது திடீரென்று வானத்திலிருந்து இடி ஒன்று தாக்கி அந்த பருந்து இறந்து போகிறது.
இந்த சிறிய கதையானது அன்னை மரியாவின் திருநாமத்திற்குரிய ஆற்றலை விளக்குகிறது. அன்னை மரியாவின் அன்புப் பிள்ளைகளாக இருக்கும் நாமும் அவருடைய திருப்பெயரை உச்சரிகின்ற போது அன்னை மரியாவின் பாதுகாப்பு நிச்சயம் இருக்கும் என்பது மிகத் திண்ணமான ஒன்றாகும்.
புனித பொனவெந்தூர் அன்னை மரியாவின் திருப்பெயரைக் குறித்து கூறுகையில் ‘இதுவே அனைத்து பெயர்களிலும் சிறப்பு மிகுந்தது, ஆசீர்வதிக்கப்பட்டது, இனிமையானது, கன்னி வழுவாதது’ என்று கூறுகின்றார். ஏனென்றால் கபிரியேல் வானதூதர் வழியாக கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பை தெரிவிக்க ‘கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்…. அவர் பெயர் மரியா.’ (லூக் 1:26-27) தொடக்க நூலில் முன்குறித்து வைத்த பெண்ணை (3:15) லூக்கா நற்செய்தியில் ‘மரியா’ என்னும் பெயர் கொண்டு அடையாளப்படுத்தி அப்பெயருக்கான சிறப்பை மீட்பரை உலகிற்கு கொண்டு வரவிருக்கும் பெண்ணாக மாட்சிமைப்படுத்தினார்.
கத்தோலிக்க இறையியல் வல்லுநரான அக்குவினோ நகர் புனித தோமா அன்னை மரியாவை வானத்து விண்மீன் என அழைக்கிறார். மாலுமிகள் விடிவெள்ளியின் ஒளியால் துறைமுகத்துக்கு வழிநடத்தப்படுவதைப்போல், பாவக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் கலங்கரை தீபமாகிய மரியா என்னும் வானத்து விண்மீனால் விண்ணகம் என்னும் கரைக்கு வழிநடத்தப்படுகிறார்கள் என்று வாயார வாழ்த்தி மெய்சிலிர்க்கிறார்.
கிறிஸ்துவின் பாடுகளோடு தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து அதை அனுதினமும் தியானித்து பல கிறிஸ்தவ பக்தி முயற்சிகளின் ஊன்றுகோலாக இருந்த புனித பிரிஜித் தான் ஆழ்நிலை தியானத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் அன்னை மரியாவின் திருக்காட்சியைக் காண்கிறார். அதில் அன்னை மரியாவின் திருப்பெயரை சொல்லி செபிப்பவரை விட்டு அலகையின் கூட்டம் அலரி அடித்து ஓடுவதை, அதே நேரத்தில் வானோர் அணிகள் அனைவரும் விரைந்து வந்து அன்னையின் திருப்பெயரைக் கூறியவருக்கு உதவி செய்ததாகவும் அக்காட்சியில் காண்கிறார். இந்நிகழ்வு அன்னை மரியாவுக்கு கடவுள் அளித்துள்ள சிறப்பு வரங்களைக் குறித்தும் அப்பெயரின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையைக் குறித்தும் எடுத்தியம்புகிறது.
புனித அம்புரோஸ் அன்னை மரியாவின் திருப்பெயரைக் குறித்து இறைவேண்டல் செய்கையில் ‘அன்னை மரியின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக என் இதயத்தில் இரங்குவதாக’ என்று மன்றாடுகின்றார்.
திருஅவையின் ராக்கோல்தா என்ற நிறைபேறுபலன்கள் கொடுக்கப்பட்ட திருஅவையின் பாரம்பரிய செபங்கள் அடங்கிய பழங்கால புத்தகத்தில் ‘மரியா’ என்னும் பெயரை ஒவ்வொரு முறையும் உச்சரிப்பவர்களுக்கு 25 நாட்களுக்கான பேறுபலன்கள் கிடைக்கும் என்று திருத்தந்தை 13ஆம் கிளமென்ட் அருளியுள்ளார்.
இத்தகைய அரிய பெரிய பெருமைகளுக்குச் சொந்தமான அன்னை மரியாவின் திருப்பெயரை நாமும் தினம் தினம் சொல்லி மீட்பின் அருளை திருத்தைலப் பொழிவாகப் பெற்று இறைவனின் இணையிலா ஆசீரைப் பெற்றுக்கொள்வோம். இது மனிதரால் அளிக்கப்பட்ட பெயர் அல்ல மாறாக இறைவனே இனங்கண்டு இறைமையால் நிறைத்த பெயர். எனவே இன்றைய விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து மரியின் திருப்பெயரை தினமும் நம் வாழ்வில் சொல்லுவோம். அலகையை வெல்லுவோம்.
மரி நாமம் மன நாதம்.
“MARY” is a Highly Honoured, Glorious blessed and Grace filled name. A name which is given to humans to invoke in times of the difficult walks of life.
The feast of the Holy Name of Mary, celebrated on September 12th, has a long history. It was in 1513 when Pope Julius III gave the permission to the Cuenta diocese in Spain to celebrate The Holy Name of Mary feast. This feast had a proper Office to September 15, the octave of our Lady’s Nativity. As a result of the liturgical reform undertaken by Pope St. Pius V, wherein it was abolished it was Pope Sixtus V that not only reinstated the feast but also moved it to September 17. Following this liturgical move the feast became so popular throughout Spain as well as the Kingdom of Naples.
As time went by, some religious orders were granted permission to celebrate the feast. It was Pope Innocent XI who made “The Feast of the Holy Name of Mary” possible for the entire Church. Initially it started to be celebrated on the Sunday following the Nativity of Mary. However, thanks to a decree, Pope St Pius X commanded that this feast be celebrated on September 12, the reason being that of commemorating the great victory over the Turks at the Battle of Vienna in 1683. When for a short time this feast was mistakenly mixed with that of the Blessed Virgin Mary’s Nativity on September 8, it was re-established for September 12.
In his book “The Glories of Mary” St. Alphonsus Ligouri explicates an example of a bird and a hawk.
“Father Bernardine de Bustis relates that a hawk darted upon a bird which had been taught to say Ave Maria; the bird said Ave Maria, and the hawk fell dead. By this our Lord wished to show us, that if an irrational bird was saved from destruction by invoking Mary, how much more surely will he be prevented from falling into the power of evil spirits, who is mindful to invoke Mary in his temptations.“ (The Glories Of Mary, Section II)
This short story proves the power and magnificent work of the name of Mary. By this we, the children of Blessed Virgin Mary, could also understand that when we too invoke the Holy name of Mary, due protection is assured.
In a poetic style St Bonaventure explains that the name of Mary has four meanings. He states: This most holy, sweet and worthy name was ’eminently fitted to so holy, sweet and worthy a virgin. For Mary means a bitter sea,2 star of the sea, the illuminated or illuminatrix.3 Mary is interpreted Lady. Mary is a bitter sea to the demons; to men she is the Star of the sea; to the Angels she is illuminatrix, and to all creatures she is Lady.
The Holy Name of Mary is not just a name that was given at random to a simple woman. Bu the Holy Name of Mary was so holy to be chosen to eternity by God the Father when he conceived Mary in His mind as the Woman in the Genesis (3:15) and through Archangel Gabriel he acknowledges that woman as Mary of Nazareth (Lk 1:26-27). It was God the Almighty who identifies the Holy Name of Mary as the one true source for the Birth of the Messiah.
St Thomas Aquinas, one of the great Catholic Theologians of all time reflects: Mary means Star of the sea, for as mariners are guided to port by the ocean star, so Christians attain to glory through Mary’s maternal intercession“.
As a Christian-Catholic mystic, Saint Gertrude was gifted by God with the grace of having very special visions. At times she would have a vision of Jesus the Lord. It is believed that she had a vision our lady in which the powers of Satan flee and Angels come in haste to help a person who invokes the Holy Name of Mary.
We also recall minding the prayer of St. Ambrose as he prays: “Your name, O Mary, is a precious ointment, which breathes forth the odor of Divine grace. Let this ointment of salvation enter the inmost recesses of our souls.”
In Raccolta, The Collection of Indulgenced prayers, The recitation of the Name MARY is indulgenced with 25days for each utterance.
Having heard all these let us with true love invoke the Holy Name of Mary and be blessed with enormous Graces.