திருச்சிலுவை நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வளிக்கும் சின்னம், மீட்பின் சின்னம். யூத மரபிலோ சிலுவை ஓர் அவமானத்தின் அடையாளமாக, இழிவின் சின்னமாக, அடிமைகளுக்கு தண்டனைக் கொடுக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இயேசு இந்த சிலுவையை தன் தோளில் சுமந்து, அதன் வழியாக நம் பாவக் கழுவாயாகிட அதற்கு தன்னைக்; கையளித்தாரோ அன்று இந்த சிலுவையானது மீட்பின் சின்னமாகி நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வளிக்கும் சின்னமாக பரிணமிக்கிறது. லீமா நகர் புனித ரோஸ் ‘திருச்சிலுவையன்றி விண்ணகம் செல்வதற்கான வேறோரு ஏணிப்படி ஏதுமில்லை’ என்று கூறுவது இக்கருத்துக்கு மிகக் கணமாக பொருந்துகிறது.
திருச்சிலுவை இறையியல்
இயேசுவைப் பின்பற்றி வாழும் அனைவரும் சிலுவையை மையமாக வைத்த ஆன்மிக நம்பிக்கையை கொண்டுள்ளோம் என்பதே நிதர்சனமான உண்மை. இயேசு விடுக்கும் அழைப்பை ஏற்று ‘அவரைப் (என்னைப்) பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு அவரை (என்னைப்) பின்பற்றட்டும்.’ (மத் 16:24)
வாழ்வில் துன்பங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ‘அதன் வழியாகவே, உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது’. (கலா 6:14) துன்பங்களும் இன்பங்களும் வாழ்வெனும் தராசில் சரிசமமாக இருக்க வேண்டியது அவசியமானதொன்றாகும். ‘பஞ்சு மெத்தைகளின் வழியாக நாம் விண்ணகம் செல்ல முடியாது’ என்கிற புனித தாமஸ் மூரின் வார்த்தைகள் திருச்சிலுவையானது துன்பங்களைக் கடக்கப் பயன்படும் சிறந்த கருவியாக இருக்கிறது என்பதை திண்ணமாய் விவரிக்கிறது. கிறிஸ்து பாடுபட்டு இறந்த அந்த கணமே மீட்பின் வாயில் அகல விரிந்து ஆன்மாக்களை விண்ணகத்திற்குள் விழுங்கத் தொடங்கியது. அவருடைய பாடுகளினாலும், இறப்பினாலும், மாட்சிக்குரிய உயிர்ப்பினாலுமே நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அதிலிருந்து மீட்படைந்து, நிலை வாழ்வின் வாக்குறுதியைப் பரிசாகப் பெற்றுள்ளோம். ஏனென்றால் ‘சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைந்துள்ளோம்.’ (1 பேதுரு 2:24) அக்குவினோ நகர் புனித தோமா கூறுவது போல் ‘திருச்சிலுவையைக் காட்டிலும் பொறுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு எதுவுமில்லை.’ அதுவே நமது புண்ணிய வாழ்வின் சிறந்த மாதிரியாகிறது.
புனித ஜான் லியோனார்தியாரும் திருச்சிலுவையும்
இதைப் பற்றியே எங்களுடைய சபை நிறுவனரும் தந்தையுமான புனித ஜான் லியோனார்தியார் ‘சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை கண்முன் வைத்து அனைத்தையும் செய்யுங்கள்’ என்று கூறுவார். சிலுவையினால் அன்றி மீட்பு இல்லை என்பதை எம் புனிதர் நன்கு அறிந்திருந்தார். ஏனென்றால் ‘சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.’ (1 கொரி 1: 18)
திருச்சிலுவையும் கிறித்தவமும்
கிபி. 312 ஆம் ஆண்டில் உரோமைப் பேரரசை யார் ஆட்சி செய்வது என்ற குழப்பம் அரசர் கான்ஸ்டண்டைனுக்கும், மாக்ஸென்தியுசுக்கும் இடையே ஏற்பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே போர் மூண்டது. இந்நேரத்தில் கான்ஸ்டண்டைன் கிறிஸ்தவர்களின் செப உதவியை நாடினார். கிறிஸ்தவர்களும் அவருக்காக இறைவேண்டல் செய்;தார்கள். அப்போது ஒருநாள் அரசர் இறைவேண்டல் செய்து கொண்டிருந்த போது அவருக்கு வானத்தில் ஒளிரும் சிலுவை அடையாளம் தோன்றி ‘இதன் மூலம் வெற்றி பெறுவாய்’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டதாகவும், மறுநாள் அதை போர்ச் சின்னமாகப் படைவீரர்களின் கொடிகளில் பயன்படுத்தி அப்போரில் வெற்றிபெற்றதாக சொல்லப்படுகிறது. அன்றே அவர் கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தார். சிலுவை அரசர் கான்ஸ்டண்டைனுக்கு வெற்றியைக் கொணர்ந்தது. ஏனென்றால் ‘கிறிஸ்துவின் சிலுவையை நாடாதவர் அவருடைய மாட்சியை நாடுவதில்லை’ என்னும் புனித சிலுவை அருளப்பரின் வார்த்தைகள் இதில் புலப்படுகிறது.
திருச்சிலுவை கண்டெடுக்கப்பட்ட வரலாறு
அதன்பிறகு கி.பி. 326ஆம் ஆண்டு கான்ஸ்டண்டைனுடைய தாயான புனித ஹெலெனா இயேசு வாழ்ந்த இடங்களை கண்டறிய எருசலேமுக்கு புனிதப் பயணம் சென்றார். 130ஆம் ஆண்டு தொடங்கி அரசர் ஏட்ரியன் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் கிரேக்க-உரோமை கடவுள்களுக்கு பெரிய கோவிலை கட்டி அந்த இடத்தை கிறிஸ்தவர்கள் வணங்காத வண்ணம் மறைந்திருந்தான். இதை அறிந்த புனித ஹெலனா ஆயர் மாகாரியுஸின் உதவியோடு அக்கோவிலையும் சிலைகளையும் தகர்த்தெறிய ஆணையிட்டார். பின்னர் அவ்விடத்தை அகழ்வாராய்ச்சி செய்து பார்த்ததில் அதற்கு கீழே மூன்று சிலுவைகள் இருப்பதைப் பார்க்கிறார். அதில் இயேசு அறையப்பட்ட சிலுவையைக் கண்டறிய ஆயரின் அனுமதியோடு இறக்கும் தருவாயிலிருந்த பெண் ஒருவரை அழைத்து வரச் சொல்லி அங்கிருந்த மூன்று சிலுவைகளையும் தொட்டுப் பார்க்கக் கூறினர். அவரும் முதல் இரண்டு சிலுவைகளையும் தொடுகின்றார். ஆனால் உடல் நலத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் மூன்றாம் சிலுவையை தொட்டவுடனேயே அப்பெண்ணின் உடலில் திடீரென மாற்றம் ஏற்பட்டு அவர் நலமடைந்ததாக வரலாறு கற்பிக்கிறது. இந்நிகழ்விற்கு பிறகு அற்புதத்தை நிகழ்த்திய சிலுவையே இயேசு அறையப்பட்ட சிலுவை என்று அவர்கள் உணர்ந்து அதை உரோமை முழுமைக்கும் அறிவிக்கிறார்கள். அதைப் போற்றிப் பெருமைப்படுத்தினார். மக்களும் அதற்கு வணக்கமும், மரியாதையும் செலுத்தத் தொடங்கினார்கள்.
ஆனால் கி.பி.614 ஆண்டு பெர்சிய மன்னனாகிய இரண்டாம் கொஸ்ரோஸ் என்பவர் இந்த திருச்சிலுவையை கைப்பற்றிக்கொண்டு சென்று ஈரானில் வைத்தார். இதனை ஹெராகிளியஸ் என்று மன்னன் 629ஆம் ஆண்டு மீட்டுக் கொண்டு அரச ஆடைகள் தரித்து பொன்முடி சூடி கால்நடையாக சுமந்து செல்ல முற்படுகிறார். ஆனால் அவரால் அச்சிலுவையை சுமக்க முடியவில்லை. அப்போது எருசலேம் ஆயராக இருந்தவர் இயேசு அரச உடை அணிந்து சிலுவையை சுமக்கவில்லை மாறாக அதை ஏழ்மை கோலமிட்டு சுமந்தார். அதே போன்று நீரும் செய்யும் என்று அறிவுறுத்தினார். அரசரும் அவ்வாறே செய்ய சிலுவை எளிமையாகி அதனை எருசலேமில் கொண்டுவந்து சேர்த்தார். அவர் திருச்சிலுவையைக் கொண்டுவந்த நாள் செப்டம்பர் 14. அதன் நினைவாகத் தான் திருச்சிலுவை மகிமை விழாவை உலகம் முழுவதும் செப்டம்பர் 14 ஆம் தேதி கொண்டாடுக்கின்றோம்.
திருச்சிலுவையின் மகிமை
நாம் சிலுவைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். சிலுவை நம்முடைய வாழ்வின் சின்னம் என்பதை நாம் அறிந்துள்ளோமா? இந்த சிலுவையால்தான் நமக்கு மீட்பு கிடைத்தது. இந்த சிலுவையால்தான் நமக்கு வாழ்வு கிடைத்தது. இந்த சிலுவையால்தான் நமக்கு வெற்றி கிடைத்தது. இந்த சிலுவையை நாமும் ஏற்று வாழுகின்றபோது இறைமகன் இயேசுவையே நாம் ஏற்று வாழ்கிறோம் என்று மறந்துவிடக் கூடாது. அந்த அருளை இறைவனிடத்தில் வேண்டிக் கேட்போம். சிலுவையைப் பார்க்கும் போதெல்லாம் நம்முடைய மீட்பும், பாவத்திலிருந்து விடுதலையும், துன்பத்திலிருந்து வெற்றியும் நிச்சயம் என்பதை உணர்ந்து செயல்படுவோம். புனித மேக்ஸி மில்லியன் கோல்பேவின் வார்த்தைகளில் ‘சிலுவை என்பது அன்பின் பள்ளிக்கூடம்.’ ஏனென்றால் ‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.’ (யோவான் 3:16)
திருச்சிலுவை திருவருள்
செபங்கள்:
தீயசக்திகளில் இருந்து விடுதலைதரும் வல்லமைமிக்க திருச்சிலுவை செபம்.
- திருச்சிலுவை அடையாளத்தினாலே + எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களை மீட்டருளும் + எங்கள் இறைவா + தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.
- நெஞ்சுக்கும் மார்புக்கும் நிறைந்தசிலுவை! நீச பிசாசுகளை விரட்டி விடும் சிலுவை! சிலுவை அடியில் தலையை வைத்து இயேசுவின் இரத்தத்தை தெளிக்கிறேன். கடந்துபோ சத்துருவே!!!
- அர்ச்சியசிஷ்ட சிலுவை ஐயற முத்திரை ஆணி அறைந்த தாழ்ப்பாள் கையிலிருந்து எடுத்து வீசுவேன்! ஓடிப்போ சத்துருவே!
- குருசானகுருசே! கட்டுண்டகுருசே! காவலாய் வந்தகுருசே! தொட்டிரும் தண்ணீரும் சிங்காரமேடையும் துன்பப்படுத்தும் பேய்களையும் எங்களை அறியாமல் எங்களுக்குத் தீமை செய்பவர்களையும் துரத்திடும் சிலுவையே மூன்றாணி! மூன்றாணி!! மூன்றாணி!!!
- இதோ ஆண்டவருடைய திருச்சிலுவை சத்துருக்களே ஓடி ஒழியுங்கள் யூதாகோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் சந்ததியும் வெற்றி கொண்டார். அல்லேலூயா! அல்லேலூயா!! அல்லேலூயா!!!
புனித ஜான் லியோனார்தியின் சிலுவை செபம்
ஓ சிலுவையே! உம்மோடு ஒன்றித்திருந்து, உம்மில் பொறிக்கப்பட்டு, உம்மால் மேன்மையடைந்து, ஒளிர்விக்கப்பட்டு நிறைவடைய வேண்டும் என்கிற தீவிர பேரார்வத்தினாலும் அன்பினாலும் என் உள்ளம் வாடுகிறது. உம்மில் அறையப்பட்டவரிடமே மீண்டும் சென்றடைந்த நீ அவரது திருஇரத்தத் துளிகளால் புனிதமடைந்து, செந்நிறமாய் அணிசெய்யப்பட்டாய். நானும் என் தலைவராம் இயேசுவைப் போல என் கைகளை விரித்து உம் கைகளோடு இணைத்துகொள்ள வேண்டும் என்கிற என் வாழ்வின் நீண்ட நாள் இலக்கை நான் அடைய என்னை அனுமதியும். நானும் என் தலைவருக்கு உண்மையுள்ள சீடனாயிருப்பேன்.
ஓ சிலவையே! உம்மால் மட்டுமே என்னை ஆற்றுப்படுத்தவும், நிறைவிக்கவும், மீண்டும் என் தலைவரிடம் என்னைக் கொண்டு சேர்க்கவும் இயலும். அவரை நான் அடைவதற்கும், அவரில் என்னை அர்ப்பணிப்பதற்கும், அவர் திருமுகத்தை நேரில் கண்டு தியானிப்பதற்கும் நீயே ஒரே வழியாய் இருக்கிறாய். உன்னையன்றி விண்ணகம் ஏறிச்செல்வதற்கான வேறு ஏணியை நான் எங்கும் கண்டிலேன்.
ஓ நற்சிலுவையே! ஓ மீட்பைத் தாங்கிய சிலுவையே! ஓ பேரார்வமிக்க சிலுவையே! என் நீண்ட வாழ்க்கைப் பயணத்தின் அழகிய முடிவே! என் துன்பங்களின் ஊதியமே! ஓ விலைமதிப்பில்லா இரத்தினமே! தங்கத்தாலும் முத்துக்களாலும் நெய்யப்பட்ட பட்டயமே! உம் அன்பர்களின் மணிமாலையே! நல்வாழ்வின் அன்பளிப்பே! என்னை உம்மிடம் அழைத்துக் கொள்ளும்.
ஓ சிலுவையே! உமக்கு மகிழ்ச்சியளிக்குமாறு உம்மிடம் வருகிறேன். இன்புற்று என்னைச் சந்திக்க வாரும் ஏனெனில் உம்மீது பற்று கொண்டு உம்மை அடைய நான் பல காலம் ஏங்கித் தவித்திருந்தேன். இறுதியில் உம்மைக் கண்டுகொண்டேன். உம்மில் உறுதியாய் நம்பிக்கை வைத்து என் பயணத்தை முடிக்கிறேன். ஆமென்.
The Holy Cross is symbol of life and redemption. For Jews Cross was symbol of humiliation and a symbol of disgrace and shame. It was given as a disgraceful sentence to the slaves. But When Jesus took up the Cross to fulfill his salvific mission to save us for the shame of sin, the Cross, which had been found to be the symbol of diminution became the icon of salvation. St. Rose of Lima rightly put the importance of the said idea in her words: “Apart from the cross there is no other ladder by which we may get to heaven.”
THEOLOGY OF THE HOLY CROSS
Jesus invites us that “whoever wants to be his disciple must deny themselves and take up their cross and follow him.” (Mt 16:24) Therefore, it is true to the fact that Christian faith is centered on the Cross of Christ. Suffering is inevitable in life for through which the world has been crucified (Gal 6:14). It is important to balance both the joys and sorrows of life. “We cannot go to heaven in featherbeds,” says St. Thomas Moore that could explicating the importance of bearing the cross as the instrument to cross over sufferings. The gates of salvation were wide open to swallow the souls of the redeemed into heaven as and when Christ was crucified to Cross. Our sins are forgiven and we are redeemed by the Passion, Death and Resurrection of Christ, for “He himself bore our sins in his body on the cross, so that, free from sins, we might live for righteousness; by his wounds you have been healed.” (1 Pet 2:24) According to St. Thomas Aquinas “If you seek patience, you will find no better example than the cross;” for we learn the life of virtues from the school of Cross.
ST. JOHN LEONARDI AND HOLY CROSS
Our beloved founder and father, St. John Leonardi advises each and every one of us to “do everything by having before our eyes and mind the Crucified Jesus.” St. John Leonardi was sure that there is salvation without cross and his life is a sure sign of his saying. “For the message about the cross is foolishness to those who are perishing, but to us who are being saved it is the power of God.” (1 Cor 1:18)
CROSS AND CHRISTIANITY
In AD 312, a dispute arose between Emperor Constantine and Maxentius over who would rule the Roman Empire. Due to this a war broke out between the two. At this time Constantine sought the prayerful help of Christians. Christians also prayed for him. The legends said that one day when the king Constantine was praying to his Father’s pagan Gods, he saw a cross aglow in the sky with the words ‘through this you will win’ inscribed above it. He then believed having seen Christ Jesus in his dreams; he used the symbol of cross on the flags of the soldiers and therefore won the battle. On that very day he declared Christianity as the religion of the state. The Symbol of Cross gave victory to King Constantine. The words of St. John of the Cross ‘he who does not seek the cross of Christ does not seek his majesty’ could well explain this event.
TRADITIONAL HISTORY OF THE HOLY CROSS
According to the tradition, in 326AD Saint Helena, mother of the Roman Emperor Constantine, went pilgrimage to Jerusalem in search of the holy places of Christ’s life. During the mid-second century, Emperor Hadrian had built a temple to Venus over the supposed site of Jesus’ tomb near Calvary. Around AD 327, under the supervision of Bishop Macarius of Jerusalem, St. Helena caused excavations to be made in order to ascertain the location of Calvary as well as that of the Holy Sepulchre. She ordered that the profane buildings to be pulled down, the statues to be broken in pieces and the rubbish to be removed. It was in the course of these excavations that the wood of the cross was recovered. Possibly through Bishop Macarius’ knowledge she brought a woman who was nearing her final days due to an incurable sickness of that time. When the woman touched the first and second crosses, her condition did not change, but when she touched the third and final cross she suddenly recovered, and Helena declared the cross with which the woman had been touched to be the True Cross.
In 614, the Persian King, Chosroes II, waged war on the Romans. After conquering Jerusalem, he confiscated many treasures, among which was the Cross of Jesus. The Byzantine emperor Heraclius initiated peace negotiations, but was rejected. He then waged war and won near Nineveh, asking for the restitution of the Cross, which then returned to Jerusalem.
THE GLORY OF THE HOLY CROSS
Let us consider how much importance we give to our cross? Do we know that the cross is the symbol of our lives? It is through this cross that we are redeemed, we have life and triumph over evil. We must not forget that when we accept this cross, we accept the Son of God. Let us pray to God for that grace. Whenever we look at the cross, let us realize that our salvation, freedom from sin, and victory over suffering are certain. In the words of St. Maximilian Kolbe “The cross is the school of love.” “For God so loved the world that he gave his only Son, so that everyone who believes in him may not perish but may have eternal life.” (John 3:16)
POWERFUL CROSS PRAYERS OF EXORCISM
- Behold the Cross of the Lord, flee bands of enemies. The Lion of the tribe of Juda, the offspring of David, hath conquered.
- The sacred Sign of the Cross commands you, + as does also the power of the mysteries of the Christian Faith.
CROSS PRAYER OF SAINT JOHN LEONARDI
O Cross, my heart languishes with love, with ardent passion and desire, with tremors. To be united with you, fixed to you, honored, enlightened and perfected by you. For you returned to him who is suspended to you that by the sacred drops of his blood you were reddened, emblazoned and consecrated. Or if I will be allowed to stretch my hands over your arms, as my Master did. I will have achieved all my purpose, I will attain what I have long desired, I will be a true disciple of my Master.
O Cross, you alone are the one who can console me, you alone can satisfy me, you alone are the one who can lead me back to my sweet Master. Other way than you, I do not find to go to him, to present myself in front of him, to make sure that one day I can contemplate him face to face. I do not find another ladder to be able to ascend to heaven.
O good Cross, welcome me, O Cross bearer of salvation, O desirable Cross, O Cross, beautiful end of my long pilgrimage, reward for my afflictions. Precious gem, frieze woven of pearls and gold, garland of your lovers, prize of an honored life.
O Cross I come to you, sure to bring you joy. Come to meet me happily since I have been looking for you for so long, I have desired you, longed for so long and finally, I have found you. In you I will end my journey, in you my faith will be confirmed. Amen.